கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் ஆளுநர் கலந்து கொண்ட நிகழ்வில் வழங்கப்பட்ட உணவில் புழு காணப்பட்டது. குறித்த உண...
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் ஆளுநர் கலந்து கொண்ட நிகழ்வில் வழங்கப்பட்ட உணவில் புழு காணப்பட்டது. குறித்த உணவுகளை வழங்கிய அப்பகுதி உணவகத்திற்கு எதிராக வழக்கு தொடப்பட்டிருந்தது.
வழக்கு விசாரணையின் போது அது தொடர்பான தண்டனை இன்று வெள்ளிக்கிழமை வழங்கப்படும் என்றும் குறித்த உணவகத்தை மீண்டும் திறக்கவும் நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
அன்றைய வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட உணவக முகாமையாளர் சார்பில் மன்றில் தோண்றிய சிரேஸ்ட சட்டத்தரணி ஸ்ரிகாந்தா வடக்கு ஆளுநர் உணவகத்திற்குள் புகுந்த நடந்து கொண்ட விடயம் தொடர்பில் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார்.
அன்றைய வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட உணவக முகாமையாளர் சார்பில் மன்றில் தோண்றிய சிரேஸ்ட சட்டத்தரணி ஸ்ரிகாந்தா வடக்கு ஆளுநர் உணவகத்திற்குள் புகுந்த நடந்து கொண்ட விடயம் தொடர்பில் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார்.
இதன்படி குறித்த வழக்கு இன்று கட்ளைக்காக எடுத்துக் கொள்ளப்படும் போது ஆளுநர் மன்றில் தோண்ற வேண்டிய நிலை காணப்பட்டது.
இவ் வழக்கில் சிறிலங்கா ஆளுநரை மன்றில் ஆஜராவதை தவிர்த்துக் கொள்வதற்கு பல்வேறு முனைப்புக்களும், பேச்சுவார்த்தைகளும் நடைபெற்றது.
குறிப்பாக உளவியல் ரீதியான அழுத்தங்கள் கடந்த சில தினங்களாக குற்றம் சாட்டப்பட்ட உணவக உரிமையாளருக்கு கொடுக்கப்பட்டு வந்தது.
இதனால் ஆளுநர் நீதி மன்றில் ஆஐராகாமல் குறித்த கட்டளையை வாபஸ் பெற நடவடிக்கை எடுக்குமாறு சட்டத்தரணி ஸ்ரீகாந்தாவிடம் உணவக உரிமையாளரால் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொள்ளப்பட்ட போதிலும் ஸ்ரிகாந்தா அதனை மறுத்து விட்டதாக கூறப்படுகின்றது.
ஆளுநர் நீதிமன்றில் ஆஐராகத்தான் வேண்டும் நீங்கள் அநாவசியமாக பயப்படவேண்டாம் என்று ஸ்ரீகாந்த கூறியும் உரிமையாளர் தொடர்ந்தும் அவரை மன்றாடி வந்துள்ளார்.
ஆளுநரை மன்றில் ஏற்றுவதில் இருந்து ஸ்ரிகாந்தா பின்வாங்க மறுத்ததால் ஒரு கட்டத்தில் புதிய சட்டத்தரணி ஒருவரை ஏற்படுத்தி சிறிலங்கா ஆளுநர் நீதிமன்றம் வருவதை தடுக்க முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டது.
மணிவண்ணன் அவர்கள் உணவக உரிமையாளரின் வேண்டுகோளிற்கும் அவரது பாதுகாப்புக் கருதியுமே இந்த நடவடிக்கையை எடுத்தது மட்டுமின்றி மணிவண்ணன் அவர்கள் ஆளுனருக்கெதிராகவே வழக்காடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் சில ஊடகங்கள் கருத்துக்களை திரிவுபடுத்தி திசைமாற்றி ஒரு சிலரின் மனங்கள் குளிர நடப்பது வெளிப்படையாக தெரியவருகின்றது.
ஆளுனர் ஒருவரை எதிர்த்து விட்டு தொடர்ந்தும் அவர்களது ஆளுகையின் கீழ் இருப்பதென்பது எவ்வளவு அபாயகரமானது என்பதை அதை சார்ந்தவர்கள் மட்டுமே புரிந்துகொள்ளமுடியும்.