இலங்கைத் தற்கொலைதாரிகளைப் பாராட்டி சர்வதேச தீவிரவாத இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ்ஸின் தலைவர் வீடியோ வெளியிட்டுள்ளார். ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தின் தலைவ...
இலங்கைத் தற்கொலைதாரிகளைப் பாராட்டி சர்வதேச தீவிரவாத இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ்ஸின் தலைவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.
ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தின் தலைவர் அபூபக்கர் அல் பக்தாதி, நீண்டகாலமாகத் தலைமறைவாக இருந்து வருகின்றார். 2014ஆம் ஆண்டுக்குப் பின்னர் அவர் தொடர்பான வீடியோ எதுவும் வெளியாகவில்லை.
இந்தநிலையில், இலங்கையில் தாக்குதல் நடத்திய தற்கொலையாளிகளைப் பாராட்டி ஐ.எஸ்.ஐ.எஸ். தலைவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்த கடைசி இடமான சிரியாவின் பாகுஸ் பகுதியை அமெரிக்கா கைப்பற்றியிருந்தது. அந்த இழப்புக்குப் பழிவாங்கவே இலங்கை மீது தாக்குதல் நடத்தப்பட்டது என ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தின் தலைவர் வீடியோவில் தெரிவித்துள்ளார்.
18 நிமிடங்களைக் கொண்ட அந்த வீடியோவில், எதிரிகளை அழிக்கும் தமது நடவடிக்கை தொடரும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
“தற்கொலைத் தாக்குதலின் மூலம் பாகுஸ் சகோதரர்களின் இதயங்களைக் குணப்படுத்தி விட்டீர்கள்” என்று பக்தாதி இந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.
மங்கலான இந்த வீடியோவில் இன்னும் சிலரும் இருப்பது பதிவாகியுள்ளது.