கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் காமினி செனரத் ஹேவவித்தான, உடன் நடைமுறைக்கு வரும் வகையில் காலி பொல...
கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் காமினி செனரத் ஹேவவித்தான, உடன் நடைமுறைக்கு வரும் வகையில் காலி பொலிஸ் அத்தியட்சகர் பிரிவுக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.
நாட்டில் ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலையடுத்து தற்கொலைக் குண்டுதாரி ஒருவருக்குச் சொந்தமான செப்புத் தொழிற்சாலையில் பணியாற்றிய 9 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் இரண்டு வாரங்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் சந்தேகநபர்கள் 9 பேருக்கும் கொழும்பு நீதிவான் பிரியந்த, பிணை வழங்கினார். அதனால் வெல்லம்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்ததுடன், ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.
அத்துடன் கொழும்பு நீதிவான் பிரியந்தவை விசாரணைக்கு உள்படுத்த வேண்டும் என்று கோரி நீதிச் சேவை ஆணைக்குழுவில் வெல்லம்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி காமினி செனரத் ஹேவவித்தான, கடந்த வாரம் முறைப்பாடு வழங்கியிருந்தார்.
இந்த நிலையில் இன்று (22) புதன்கிழமை உடன் நடைமுறைக்கு வரும் வகையில் வெல்லம்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி காமினி செனரத் ஹேவவித்தான, காலி பொலிஸ் அத்தியட்சகர் பிரிவுக்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழுவால் இடமாற்றப்பட்டுள்ளார்.
இதேவேளை, பிரதான பொலிஸ் பரிசோதகர் காமினி செனரத் ஹேவவித்தான, 2016-2018ஆம் ஆண்டு காலப் பகுதியில் யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.