எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ போட்டியிட்டால் தான் ஆதரவு வழங்கப் போவதில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம கூறியு...
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ போட்டியிட்டால் தான் ஆதரவு வழங்கப் போவதில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம கூறியுள்ளார்.
கொழும்பு நீதிமன்ற வளாகத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் இந்தக் கருத்தை தெரிவித்தார்.
தனது நிலைப்பாட்டை ஒரு வருடத்துக்கு முன்னர் இருந்தே தெரிவித்து வருவதாக அவர் கூறியுள்ளார்.
கொலையுடன் தொடர்புபட்ட நபர் இருப்பாராக இருந்தால், குறித்த நபர் கொலை செய்தவர் என்று மக்களிடம் கருத்து நிலவுமானால் அவருக்கு ஆதரவு வழங்குவதில்லை என்று கூறினார்.
எல்லா அரசாங்கமும் தமது அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக கொலைகளை செய்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம கூறியுள்ளார்.