மானிப்பாய் பகுதியில் பொலிசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வாளுடன் சென்ற கும்பல் ஒன்று பொலிசார் மீது தா...
மானிப்பாய் பகுதியில் பொலிசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வாளுடன் சென்ற கும்பல் ஒன்று பொலிசார் மீது தாக்குதல் நடத்த முயன்றபோதே, துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
மானிப்பாய் பூட் சிற்றிக்கு முன்பாக, இணுவில் வீதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்களை, மறித்தபோது அவர்கள் வாளால் வெட்ட வந்ததாகவும், அவர்கள் மீதே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும் பொலிஸ் தர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இன்னொரு இளைஞர் படுகாயமடைந்துள்ளார்.