தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (20) பதவி விலகவுள்ளதை தொடர்ந்து, மஹிந்த ராஜபக்சவை பிரதமராக கொண்ட இடைக்கால அரசாங்கம் இன்று மாலை அல...
தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (20) பதவி விலகவுள்ளதை தொடர்ந்து, மஹிந்த ராஜபக்சவை பிரதமராக கொண்ட இடைக்கால அரசாங்கம் இன்று மாலை அல்லது நாளை காலையே பதவியேற்கவுள்ளது.
கடந்த சில தினங்களாக நீடித்த இழுபறியின் பின்னர், தனது பிரதமர் பதவியை துறக்க ரணில் விக்கிரமசிங்க நேற்று முடிவு செய்தார். நேற்று மாலை, ஜனாதிபதி கோட்டாபயவை சந்தித்து, தனது முடிவை தெரிவித்தார்.
ஐ.தே.கவின் இணக்கப்பாட்டுடன் நாடாளுமன்றத்தை உடனடியாக கலைப்பது, அரசாங்கத்தை பெரமுனவிடம் ஒப்படைப்பது, மார்ச் வரை தற்போதைய அரசாங்கமே பதவியிலிருக்கும் என்ற மூன்று விடயங்களையும் முன்னிலைப்படுத்தி இரண்டு தரப்பும் ஆலோசித்து வந்தபோதும், தற்போதைய அரசாங்கம் தொடர்வதை கோட்டாபய ராஜபக்சவும், சஜித் தரப்பும் விரும்பவில்லை. மக்களின் ஆணையை மதித்து பதவிவிலக வேண்டுமென இரு தரப்பும் கருதின. நாடாளுமன்றத்தை கலைப்பதை ஐ.தே.க மற்றும் சு.க, பெரமுனவிலுள்ள இளம் உறுப்பினர்கள் விரும்பவில்லை. தமது நாடாளுமன்ற ஓய்வூதியம் கிடைக்காமல் போய்விடுமென அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால், இறுதி வழியான, இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதென இரு தரப்பும் இணக்கம் கண்டுள்ளன.
இதன்படி, அனேகமாக இன்று மஹிந்த ராஜபக்ச பிரதமராக பதவியேற்கவுள்ளார். அத்துடன், தினேஷ் குணவர்த்தன, விமல் வீரவன்ச, கம்மன்பில, மஹிந்த அமரவீர, தயாசிறி ஜயசேகர, நிமால் சிறிபாலடி சில்வா உள்ளிட்டவர்கள் அமைச்சு பதவியை ஏற்கவுள்ளனர்.