ஐந்து கோடியே 80 இலட்சம் ரூபா பெறுமதியான ஒரு தொகை தங்க பிஸ்கட்டுகளை உடலுக்குள் சூட்சுமமான முறையில் மறைத்து அதனை கட்டுநாயக்க விமான நிலையத்தில்...
ஐந்து கோடியே 80 இலட்சம் ரூபா பெறுமதியான ஒரு தொகை தங்க பிஸ்கட்டுகளை உடலுக்குள் சூட்சுமமான முறையில் மறைத்து அதனை கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து கடத்த முற்பட்ட விமான நிலைய அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகளால் குறித்த அதிகாரி 05 காலை கைது செய்யப்பட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளரும், சுங்க பிரிவின் மேலதிக பணிப்பாளருமான ஜெனரல் சுனில் ஜயரத்ன தெரிவித்தார்.
விமான நிலையத்திற்குள் பயணிகள் பொருட்களை கொண்டுச் செல்வதற்கு உதவி புரியும் போட்டர் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் தனது வயிற்று பகுதியில் மறைத்து வைத்து 6 கிலோ 500 கிராம் நிறையுடைய 65 தங்க பிஸ்கட்டுகளை விமான நிலையத்திற்குள் உட்செல்லும் வழியின் ஊடாக கடந்த முற்பட்ட போதே அவர் செய்யப்பட்டுள்ளார்.
குருணாகல் பகுதியில் வசிக்கும் 41 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை சுங்க பிரிவினர் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.