தனது நாட்டிலுள்ள அனைத்து வெளிநாட்டு படைகளும் வெளியேற வேண்டுமென்ற பிரேரணை ஈராக் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. பக்தாத் விமான நிலைய...
தனது நாட்டிலுள்ள அனைத்து வெளிநாட்டு படைகளும் வெளியேற வேண்டுமென்ற பிரேரணை ஈராக் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பக்தாத் விமான நிலையத்தில் அமெரிக்கா நடத்திய விமானத் தாக்குலில் ஈராக் தளபதி சுலைமான் கொல்லப்பட்டதை தொடர்ந்து, இன்று கூடிய ஈராக் நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் ஆராயப்பட்டது.
இதன்போதே, மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
“ஈராக்கில் இராணுவ நடவடிக்கைகள் முடிவடைந்ததாலும், வெற்றியை அடைந்ததாலும் இஸ்லாமிய அரசுக்கு எதிராக போராடும் சர்வதேச கூட்டணியின் உதவிக்கான கோரிக்கையை அரசாங்கம் ரத்து செய்ய உறுதியளிக்கிறது.
ஈராக் மண்ணில் எந்தவொரு வெளிநாட்டு துருப்புக்களும் இருப்பதை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், எந்த காரணத்திற்காகவும் அதன் நிலம், வான்வெளி அல்லது தண்ணீரைப் பயன்படுத்துவதைத் தடைசெய்யவும் ஈராக் அரசாங்கம் செயல்பட வேண்டும்.” என தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.எஸ் அமைப்பிற்கு எதிரான போராட்டத்தில் அமெரிக்காவின் உதவியை பெற, 2014 ஆம் ஆண்டில் இரண்டு நாடுகளும் மேற்கொண்ட ஒப்பந்தத்தை முடிவுக்கு கொண்டுவர நாடாளுமன்ற தீர்மானம் வலியுறுத்தியுள்ளது.