யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் வலம்புரி பத்திரிகையின் செய்தி ஆசிரியர் இ.இராஜேஸ்கரனின் வீட்டின் மீது இனந்தெரியாத கும்பல் ஒன்று தாக்குதல் மேற...
யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் வலம்புரி பத்திரிகையின் செய்தி ஆசிரியர் இ.இராஜேஸ்கரனின் வீட்டின் மீது இனந்தெரியாத கும்பல் ஒன்று தாக்குதல் மேற்கொண்டுள்ளது என்று மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் – மானிப்பாய் பகுதியில் உள்ள ஊடகவியலாளரின் வீட்டின் மீது நேற்றைய தினம் ஞாயிற்றுகிழமை மாலை இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சுமார் 5க்கும் மேற்பட்டவர்கள் சைக்கிளில் சென்று வீட்டின் நுழைவாயில் படலை மற்றும் கதவு என்பவற்றின் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். அதனால் அவை சேதமடைந்தன. அதன் பின்னர் அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பி சென்றுள்ளது.
கடந்த மாதம் குறித்த ஊடகவியலாளரது வீட்டின் முன்பதாக அமைந்திருந்த மற்றொரு வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்ததுடன் ஊடகவியலாளர் வீட்டின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
இதனையடுத்து முன்னால் வசித்து வந்திருந்த குடும்பம் அங்கிருந்து இடம்பெயர்ந்த நிலையில் நேற்றைய தினம் மீண்டும் ஊடகவியலாளர் வீடு தாக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதனை அடுத்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்