மத்தள மற்றும் இரத்மலான விமான நிலையம் ஊடான பயன்பாட்டினை அதிகரிக்கும் நோக்கில் விமான நிலைய வரியினை இரத்துச் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழ...
மத்தள மற்றும் இரத்மலான விமான நிலையம் ஊடான பயன்பாட்டினை அதிகரிக்கும் நோக்கில் விமான நிலைய வரியினை இரத்துச் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இலங்கையின் இரத்மலான விமான நிலையம் ஊடான பயன்பாட்டினை அதிகரித்து விமான சேவையாளர்களையும் அதிகரிக்கும் நோக்கில் குறித்த இரு விமான நிலைய வரியினை இரத்துச் செய்வதற்கு நேற்று முன்தினம் இடம்பெற்ற அமைச்சரவையில் 38வது விடயமாக சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் இவ் விடயத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதன் பிரகாரம் விமான நிலைய வரியான 60 டொலர் வரி இரண்டு ஆண்டுகளிற்கு அறவிடப்பட மாட்டாது. இதேநேரம் இதே அமைச்சரவையில் குறித்த வரி விலக்கு நடைமுறையினை யாழ்ப்பாணம் விமான நிலையத்திற்கும் வழங்குமாறும் உரிய சான்றுகள் வழங்கப்பட்டு கோரிக்கை விடப்பட்டதோடு யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக பயணிப்போருக்கு இரட்டிப்பு வரி அறவிடப்படுவதான விடயமும் பிரஸ்தாபிக்கப்பட்டது.