கொரோனா வைரஸ் தாக்கத்தால் வெலிசறை கடற்படை முகாமில் சுமார் 85 சிப்பாய்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது இதுவரை கண்டறியப்பட்டுள்ளது. நேற்ற...
கொரோனா வைரஸ் தாக்கத்தால் வெலிசறை கடற்படை முகாமில் சுமார் 85 சிப்பாய்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது இதுவரை கண்டறியப்பட்டுள்ளது.
நேற்று அடையாளம் காணப்பட்ட 40 கொரோனா தொற்றுடையோரில், 20 பேர் வெலிசறை முகாமை சேர்ந்தவர்களாவர். அவர்களில் 10 பேர் முகாமில் நடந்த சோதனையில் கண்டறியப்பட்டனர். விடுமுறையில் இருந்த 10 பேர், அந்தந்த பகுதி வைத்தியசாலைகளின் மூலம் கண்டறியப்பட்டனர்.
விடுமுறைக்கு சென்ற கடற்படையினரின் குடும்ப உறுப்பினர்கள் மூவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் பெண் இராணுவ வீரராவார்.
update : 6.10 AM
460 ஆக உயர்ந்தது கொரோனா தொற்று
கொரோனாவினால் பாதிக்கப்பட்ட மேலும் 8 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதன்மூலம், நாட்டில் கொரோனா தொற்று 460 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று 40 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதில் வெலிசறை கடற்படை தளத்தில் உள்ள 10 கடற்படை சிப்பாய்களும், அந்த தளத்திலிருந்து விடுமுறையில் சென்றிருந்த 10 கடற்படை சிப்பாய்களும், ஒரு கடற்படை சிப்பாயின் மனைவி மற்றும் சிறு குழந்தை ஆகியோரும் தொற்றிற்கு உள்ளாகியவர்களில் அடங்குவர்.