யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இதுவரையில் 89 பேருக்கான கொரோனா தொற்று ஆய்வுகூட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று பல்கலைக்கழக மருத்து...
யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இதுவரையில் 89 பேருக்கான கொரோனா தொற்று ஆய்வுகூட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று பல்கலைக்கழக மருத்துவ பீட பீடாதிபதியும் மருத்துவ நிபுணருமான எஸ்.ரவிராஜ் தெரிவித்துள்ளார்.
இந்த பரிசோதணையில் எவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் அவர் மேலும் தகவல் தெரிவித்துள்ளார்.
யாழ்.போதனா வைத்தயி சாலையில் இன்று காலை செய்தியாளர் சந்திப்பு நடந்தது.
இதில் யாழ்.போதனா வைத்திய சாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி யாழ்.பல்கலைக் கழக மருத்துவ பீட பீடாதிபதி மருத்துவர் எஸ்.ரவிராஜ் யாழ்.பல்கலை ககழக மருத்துவபீட சிரேஸ்ட விரிவுரையாளர் ஏ.முருகானந்தா யாழ்.போதனா வைத்திய சாலை துண்ணுயிரியல் வைத்திய நிபுணர் ரஜந்தி இராமச்சந்திரன் hழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட சிரேஸ்ர விரிவுரையாளர் திருமதி கே.முருகானந்தன் யாழ் போதனா வைத்தியசாலை வைத்தியசாலை தலைமை மருத்துவ தொழில்நுட்பவியலாளர் எஸ்.சுரேஸ்குமார் யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடம் பேராசிரியர் செ.கண்ணதாசன் கலந்து கொண்டிருந்தனர்.
இச் சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே ரவிராஜ் மேற்கண்டவாறு கூறினார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-
கொரோனா வைரஸ் தொடர்பில் ஒரு நாளில் 20 தொடக்கம் 24 பேரில் பரிசோதனைகளை ஒரு தடவையில் மேற்கொள்ள முடியும்.
அதற்கு மேலதிகமாக பரிசோதனை மேற்கொள்ள வேண்டுமே ஆனால் ஒரு நாளில் இரண்டு தடவைகள் பரிசோதனை செய்வதன் மூலம் 45 பேருக்கு சோதனை நடவடிக்கை மேற்கொள்ள முடியும்.
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை பணிப்பாளரால் பரிந்துரைக்கப்படும் நபர்களின் மாதிரிகளே குறித்த பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றது என்றார்.