வடக்கு மாகாண பொறியிலாளர்களின் அமைப்பு யாழ் போதனா வைத்தியசாலைக்கு நிதியுதவி வழங்கியுள்ளது. கொரோனோ வைரஸ் தொற்று அதிகரித்து வருகின்ற நிலைய...
கொரோனோ வைரஸ் தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில் அதனைக் கட்டப்படுத்துவதற்கு யாழ் போதனா வைத்தியசாலை பல்வெறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
இதற்காக பல தனிநபர்களும் பொது அமைப்புக்கள் சமய நிறுவனங்கள் என பலரும் வைத்தியசாலைக்கு பல்வெறு உதவிகளை தொடர்ந்தும் வழங்கி வருகின்றனர்.
இந்த நிலைமையிலையே பொறியிலாளர் அமைப்பும் வைத்தியசாலைக்கு ஒரு தொகுதி நிதியை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதற்கு வைத்திய சாலைப் பணிப்பாளர் நன்றியும் தெரிவித்துள்ளார்.