யாழ்.மாவட்ட செயலகம்- பிராந்திய சுகாதாரசேவைகள் திணைக்களம் இணைந்து சிறப்பான பாதுகாப்பு நடவடிக்கை..! கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்தவர்க...
யாழ்.மாவட்ட செயலகம்- பிராந்திய சுகாதாரசேவைகள் திணைக்களம் இணைந்து சிறப்பான பாதுகாப்பு நடவடிக்கை..!
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்தவர்களுக்கு யாழ்.மாவட்ட செயலகத்தில் கொரோனா பரிசோதனை நடாத்தப்பட்டிருக்கின்றது.
இந்த தகவலை யாழ்ப்பாணம் மாவட்ட செயலாளர் க. மகேசன் தெரிவித்தார். கொழும்பிலிருந்து அத்தியாவசிய பொருள்களை
யாழ்ப்பாணத்திற்கு ஏற்றிவந்த பாரவூர்திகளின் சாரதிகள், உதவியாளர்களுக்கு இன்றைய தினம் யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள்
திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டது.இன்றைய தினம் 30 பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
மீண்டும் தொடர்ச்சியாக இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளன என்றும் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் கூறினார்.
கொழும்பு கொரோனா வைரஸ் பரவல் அபாய வலயமாக காணப்படும் நிலையில் அங்கு சென்று வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பாரவூர்திச் சாரதிகள் மற்றும் உதவியாளர்களுக்கு இவ்வாறு பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படுகிறது