கோப்பாய் கல்வியற் கல்லூரியில் படையினருக்கான தனிமைப்படுத்தல் நிலையம் அமைக்கும் நடவடிக்கைகயை அரசாங்கம் இடை நிறுத்தி இருப்பதாக தெரிவிக்கப்படுகி...
கோப்பாய் கல்வியற் கல்லூரியில் படையினருக்கான தனிமைப்படுத்தல் நிலையம் அமைக்கும் நடவடிக்கைகயை அரசாங்கம் இடை நிறுத்தி இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணம் கோப்பாய் பிரதேசத்தில் அமைந்துள்ள தேசிய கல்வியற் கல்லுாரியின் இரண்டு விடுதிகளை படையினருக்கான தனிமைப்படுத்தல் நிலையங்களாக பணன்படுத்தவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு அப் பகுதியில் படையினரும் பொலிஸாரும் பெருமளவில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன .
ஆனாலும் அங்கு தனிமைப்படுத்தல் நிலையம் அமைப்பதற்கு அப்பகுதி மக்களும் தமது எதிர்ப்பைத் தெரிவித்திருந்தனர். அதே போன்று பலரும் கல்லுாரியில் அமைப்பதற்கு எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.
இந்நிலையில் இன்று மாலை முதல் அங்கிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.