சுகாதார நடைமுறைகளை பற்றி கருத்து தெரிவிக்கும் பொலிசார் அதனை பின்பற்றுவதில்லை என பலராலும் விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நேற்று யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு இடம்பெற்றது. இதன்போது அவ்விடத்திற்கு வந்த பொலிசார் சமூக இடைவெளியை பின்பற்றாது செயற்பட அனுமதியளிக்க முடியாதென மாணவர்களை எச்சரித்தனர். அத்துடன் மாணவர்களை அச்சுறுத்தும் விதத்தில் தகவல்களை பெற்று புகைப்படங்களையும் எடுத்து கொண்டனர்.
சுகாதார நடைமுறைகளை பற்றி கருத்து தெரிவிக்கும் பொலிசார் அதனை பின்பற்றுவதில்லை என பலராலும் விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக நேற்று யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு இடம்பெற்றது. இதன்போது அவ்விடத்திற்கு வந்த பொலிசார் சமூக இடைவெளியை பின்பற்றாது செயற்பட அனுமதியளிக்க முடியாதென மாணவர்களை எச்சரித்தனர். அத்துடன் மாணவர்களை அச்சுறுத்தும் விதத்தில் தகவல்களை பெற்று புகைப்படங்களையும் எடுத்து கொண்டனர்.
இதே நேரத்தில் அவ்விடத்தில் வந்த பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் சிலர் முககவசம் மற்றும் கையுறை என்பவற்றை அணியாது மாணவர்களுக்கு சுகாதார நடைமுறைகளை விளக்கினர்.
ஏனையோருக்கு பொலிசார் உபதேசம் செய்ய முதல் தாங்கள் அதற்கேற்ப நடக்கவேண்டுமென அங்கிருந்த பலரும் கருத்து தெரிவித்தனர்.