ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி பலவித பொய்ப்பிரசாரங்களை நடத்திவருவதால் அவர்களுக்கு ஜனநாயக ரீதியில் வாக்களிப்பதை மக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என...
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி பலவித பொய்ப்பிரசாரங்களை நடத்திவருவதால் அவர்களுக்கு ஜனநாயக ரீதியில் வாக்களிப்பதை மக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினரான பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. .
யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இப்படிக் கூறியிருப்பதாக சிங்களப் பத்திரிகை ஒன்று இன்று சனிக்கிழமை செய்தி வெளியிட்டிருக்கிறது.
“சிங்கள மொழி எனக்குத் தெரியாது. அதனால் சிங்கள மொழியில் எழுதப்படும் விடயங்களைப் படிக்கவும் தெரியாது. இப்படியிருக்கையில், சிங்கள ஊடகங்கள் சிலவற்றில் பொதுஜன முன்னணியின் பொய்யான பிரசாரங்கள் பிரசுரிக்கப்படுகின்றன. என்னை ஆணைக்குழுவிலிருந்து விலக்குவதற்கே சிலர் முயற்சித்து வருகின்றனர்”