தமிழ் தேசிய மக்கள் முன்னணியிலிருந்து மணிவண்ணனை நீக்குவதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைமையினால் கூறப்பட்ட காரணம் போலியானது என்பதை அம்...
தமிழ் தேசிய மக்கள் முன்னணியிலிருந்து மணிவண்ணனை நீக்குவதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைமையினால் கூறப்பட்ட காரணம் போலியானது என்பதை அம்பலப்படுத்தி, சமூக ஊடகங்களில் ஆதாரங்கள் பகிரப்பட்டு வருகிறது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியிலிருந்து மணிவண்ணனை நீக்குவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக, தம்முடன் முரண்பட்ட கனடிய குடியுரிமை கொண்ட தமிழர் ஒருவரிடம் கொரோனா நிவாரணத்திற்காக பண உதவியை பெற்றார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், அந்த கனடியர் மணிவண்ணனை விட, கட்சியின் இன்னும் பலருக்கு கொரோனா உதவி திட்டத்திற்காக பணம் அனுப்பியுள்ளார் என தெரிகிறது.
அத்துடன், மணிவண்ணனிற்கு ஒரு நீதி, மற்றையவர்களிற்கு ஒரு நீதியா என விமர்சித்து வருகிறார்கள்.