நல்லூர் பிரதேச சபைக்குள் உட்புகுந்து சபையின் செயலாளர் எஸ்.சுதர்சன் மீது தாக்குதல் நடத்திய சந்தேக நபர் கோப்பாய் பொலிசாரால் கைது செய்யப்பட்டு...
நல்லூர் பிரதேச சபைக்குள் உட்புகுந்து சபையின் செயலாளர் எஸ்.சுதர்சன் மீது தாக்குதல் நடத்திய சந்தேக நபர் கோப்பாய் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் இன்று நடைபெற்றது.இது
தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணம் நல்லூர் அரசடியைச் சேர்ந்த ஒருவர், திருநெல்வேலி சந்தை தொகுதியில் உள்ள கடை தொடர்பில் பிரதேச சபைச்
செயலாளரால் கட்டுப்பாடு விதிக்கப்பட்டதாகத் தெரிவித்து பிரதேச சபைக்குள் சென்று முரண்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் திடீரென பிரதேச சபைச் செயலாளரை தாக்கியுள்ளார். தாக்கிவிட்டுத் தப்பிச் செல்ல முற்பட்ட போதும், அவரை தடுத்துவைத்த பிரதேச சபை ஊழியர்கள் கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.சந்தேக நபரின் தாக்குதலுக்கு உள்ளன நல்லூர் பிரதேச சபையின் செயலாளர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடமை நேரத்தில் அரச ஊழியரை
அலுவலகத்தில் உட்புகுந்து தாக்கிய சந்தேக நபரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான
நடவடிக்கையை கோப்பாய் பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.