நாரஹெபிட்டியிலுள்ள வீட்டுவசதி மேம்பாட்டு ஆணையத்தின் அலுவலகத்திற்குள் ஜனாதிபதி திடீரென விஜயம் செய்துள்ளார். ஒரு நபர் கொடுத்த அளித்த முறைப்பாட...
நாரஹெபிட்டியிலுள்ள வீட்டுவசதி மேம்பாட்டு ஆணையத்தின் அலுவலகத்திற்குள் ஜனாதிபதி திடீரென விஜயம் செய்துள்ளார்.
ஒரு நபர் கொடுத்த அளித்த முறைப்பாட்டை அடுத்து ஜனாதிபதி நேற்று குறித்த அலுவலகத்திற்கு சென்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
உத்தியோகபூர்வ தேவை ஒன்றுக்காக குறித்த அலுவலகத்திற்கு வந்ததாகவும், எனினும் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் தமது வேலையை செய்து கொடுக்கவில்லை எனவும் ஜனாதிபதியிடம் பெண் ஒருவர் முறையிட்டுள்ளார்.
இதன்படி, வீட்டுவசதி மேம்பாட்டு ஆணையத்தின் அலுவலகத்தை ஜனாதிபதி பார்வையிட்டதுடன், அங்கு போதுமான ஊழியர்கள் இருப்பதையும் அவதானித்தார். இருந்தும் அங்கு சரியாக கடமைகள் முன்னெடுக்கப்படவில்லை.
இதன்போது சேவையை நாட வந்த ஒரு ஊனமுற்ற நபரை ஜனாதிபதி கண்டார், மிகுந்த மன உளைச்சலில் இருந்தார் மற்றும் அவரது தேவைகள் மற்றும் தகவல்களை விசாரித்தார்.
குறித்த நபரும் தாம் நாள் முழுதும் வெளியில் இருப்பதாகவும், யாரும் கவனிப்பது இல்லை என்றும் ஜனாதிபதியிடம் முறையிட்டுள்ளார்.
இதையடுத்து ஊழியர்களைச் சந்தித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பொது ஊழியர்களின் முதன்மைப் பொறுப்பை தெளிவுபடுத்தியதுடன், பொதுத் தேவைகளை திறமையாகவும் சமரசமின்றி நிறைவேற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
வாடிக்கையாளர்களை ஏன் வெளியில் அனுப்புகின்றீர்கள், எத்தனை பேர் இருக்கின்றீர்கள், ஏன் தாமதம் என்றெல்லாம் அடுத்தடுத்து கேள்விகளை தொடுத்துள்ளார்.
இதனால் ஊழியர்கள் தடுமாறியதுடன் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.