கிளிநொச்சி ஜெயபுர மக்களின் நீண்ட கால கோரிக்கைக்கு ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினா...
கிளிநொச்சி ஜெயபுர மக்களின் நீண்ட கால கோரிக்கைக்கு ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் சுமார் 100 ஏக்கர் காணி நேற்று மக்களிடம் கைளிக்கப்பட்டுள்ளது .
போர் முடிவுக்கு வந்த பின்னர் தங்களுக்குரிய வயல் காணிகளை வனவளத் திணைக்களத்தினர் கையகப்படுத்தி வைத்துள்ளமை தொடர்பில் கடந்த மாதம் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி முன்னாயத்த கலந்துரையாடலில் குறித்த பகுதி மக்கள் சுட்டிக்காட்டப்பட்டிருந்தனர்.
குறித்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்திய அமைச்சர் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை தொடர்ந்து குறித்த காணி விடுவிப்பு இடம் பெற்றுள்ளது
1983 ஆம் ஆண்டு குறித்த பகுதியில் குடியேற்றப்பட்ட மக்களின் விவசாயத்திற்க ஒரு ஏக்கர் வீதம் வயல் காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டது.
இந்நிலையில் ஜெயபுரம் கிராமத்தில் 540 குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் குறித்த 100 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டமை தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்த உந்து சக்தியாக அமையும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.