மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் 832 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அவற்றில் 1...
மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் 832 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அவற்றில் 10 பேர் யாழ்ப்பாண மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்று தெரியவருகிறது.
இவர்கள் 10 பேருக்கும் கொழும்பிலேயே வைத்து சிகிச்சைகள் செய்யப்பட்டு வருவதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இவர்கள் 10 பேருமே அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவில்லை என்றும் இவர்களை பார்க்க உறவினர்கள் யாரும் செல்லவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.