பாபர் மசூதி இடிப்பு வழக்கில் 27 ஆண்டுகளுக்கு பிறகு லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட...
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் 27 ஆண்டுகளுக்கு பிறகு லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது.
இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பாஜக மூத்த தலைவர் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி, கல்யாண் சிங் உள்ளிட்ட 32 பேரும் விடுவிக்கப்பட்டனர். குற்றச்சாட்டுகளை போதிய ஆதாரங்களுடன் சிபிஐ நிரூபிக்காததால் அவர்கள் விடுவிக்கப்படுவதாக நீதிபதி சுரேந்திர குமார் யாதவ் தெரிவித்தார்.
‘இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக சிபிஐ வழங்கிய ஒளி, ஒலி ஆதாரங்களின் நம்பகத்தன்மையை நிரூபிக்க இயலவில்லை. சிபிஐ வழங்கிய பல்வேறு ஆதாரங்களில் ஒளிப்பதிவு தெளிவாக இல்லை.
குற்றம்சாட்டப்பட்டவர்கள்தான் பாபர் மசூதியை இடிக்க தூண்டினார்கள் என்பதற்கு ஆதாரங்கள் இல்லை. பாபர் மசூதி இடிப்பு திட்டமிட்ட சதி அல்ல. பாபர் மசூதி இடிப்பில் ஈடுபட்டது சமூக விரோதிகளே’ என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.