வார இறுதி நாட்களான சனி, ஞாயிறு தினங்களில் நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை பிறப்பிக்கும் திட்டம் தற்போது இல்லை என பிரதி பொலிஸ...
வார இறுதி நாட்களான சனி, ஞாயிறு தினங்களில் நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை பிறப்பிக்கும் திட்டம் தற்போது இல்லை என பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
நாடு முழுவதும் கொரோனா தொற்று வைரஸ் பற்றிய அச்சம் பரவிவரும் நிலையில் ஊரடங்கு தொடர்பில் பலவாறான கருத்துக்கள் வெளியாகி வருகின்றன. இது தொடர்பில் பிரதி பொலிஸ் மா அதிபரை தொடர்பு கொள்ளும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதேவேளை கம்பஹா மாவட்டத்தில் பல இடங்களிலும் ஊரடங்கு நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.