வேலணை துறைமுகத்தில் கட்டிவைத்திருந்த சமயம் மூன்று தினங்களிற்கு முன்பு காணாமல்போன படகு கண்ணாப்பத்தை அருகே விசமிகளால் தீயிட்டு கொழுத்தப்பட்ட ந...
வேலணை துறைமுகத்தில் கட்டிவைத்திருந்த சமயம் மூன்று தினங்களிற்கு முன்பு காணாமல்போன படகு கண்ணாப்பத்தை அருகே விசமிகளால் தீயிட்டு கொழுத்தப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
வேலணைப் பகுதியைச் சேர்ந்த மீனவரான மாணிக்கம் - ரவிசங்கர் என்பவரின் படகே இவ்வாறு தீயிட்டுக் கொழுத்தப்பட்டுள்ளதாக ஊர்காவற்துறை பொலிசாரிடம் முறையிடப்பட்டுள்ளது.
இவ்வாறு தீயிடப்பட்ட சம்பவம் தொடர்பில் கடற்படையினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டதோடு தீயில் எரிந்து கருகிய படகின் பெறுமதி 5 லட்சம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேநேரம் படகு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தமையினால் அதன் இயந்திரத்தினை உரிமையாளர் எடுத்துச் சென்றதனால் இயந்திரம் தப்பியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.