புதிய மருத்துவ கிளினிக் கட்டடத் தொகுதி வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. யாழ் போதனா வைத்தியசாலை பின்புற வீதியில் - விக்டோரியா வீதி- ...
புதிய மருத்துவ கிளினிக் கட்டடத் தொகுதி வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
யாழ் போதனா வைத்தியசாலை பின்புற வீதியில் - விக்டோரியா வீதி- அமைந்திருக்கின்ற கட்டடத் தொகுதியில் நேற்று மருத்துவ கிளினிக் சேவைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
மேற்படி கட்டட தொகுதியை வைத்திய சேவைக்காக முன்னாள் சுபாஷ் ஹோட்டல் உரிமையாளர் மறைந்த சங்கரன் அவர்களின் புதல்வர் ஹரிஹரன் அவர்கள் தற்காலிகமாக வழங்கியிருக்கின்றார்.
இந் நிகழ்வில் கலாநிதி ஆறு திருமுருகன், ஹரிஹரன் வைத்தியர்கள் தாதியர்கள் பணியாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த கட்டிட தொகுதியில் எதிர்வரும் சில நாட்களில் மேலும் சில கிளினிக் பகுதிகளில் மேற்படி கட்டடத் தொகுதியில் இயங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
1962 காலப்பகுதியில் மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் எம் ஜி ராமச்சந்திரன் மேற்படி ஹோட்டலுக்கு விஜயம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.