யாழ் நகர பஸ் நிலைய கடை தொகுதி பிரச்சினைக்கு மாநகர சபையில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை ஒன்று திரட்டி சிறந்த தீர்வை உருவா...
யாழ் நகர பஸ் நிலைய கடை தொகுதி பிரச்சினைக்கு மாநகர சபையில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை ஒன்று திரட்டி சிறந்த தீர்வை உருவாக்க முடியும் என யாழ் மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார்.
பல காலமாக இருந்து வருகிற யாழ் நகர பகுதியில் பஸ் நிலையத்தை சுற்றியுள்ள கடை தொகுதி பிரச்சினையை தொடர்பில் மணிவண்ணன் கூறுகையில், முதலில் அவர்களுக்கு எற்ற இன்னும் ஒரு இடத்தை தெரிவு செய்து அதன் பின்னர் நடவடிக்கை தொடரவேண்டும் அதே நேரத்தில் புதிய இடத்தை தெரிவு செய்வதற்கு யாழ் மாநகர சபையின் அங்கத்துவம் உள்ள கட்சிகளில் இருந்து ஒருவர் வீதம் மற்றும் அதிகாரிகள் குறித்த கடை பிரதிநிதிகள் என ஒன்றினைந்து புதிய இடத்தை தெரிவு செய்வதற்கு முயற்சிக்க வேண்டும் என்றும் கூறினார்.
இது தொடர்பில் அனேகமாக உறுப்பினர்கள் மணிவண்ணன் அவர்களின் கருத்தை எற்றுக்கொண்டனார். அதன் அடிப்படையிலேயே யாழ் மாநகர சபை உறுப்பினர்களை கொண்ட குழு அமைக்கப்பட்டது.
இதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் சட்டத்தரணிகள் மணிவண்ணன்
தமிழ்த தேசிய கூட்டமைப்பு சார்பில் திரு. நிபாகீர் ஜ.தே.க சார்பில் திரு குயிலன் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் திருமதி. விஜயகாந்த் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பில் திரு. சிறிகரன் தெரிவு செய்யப்பட்டனார் ஈ.பி.டி.பி பிறகு பெயர் தருவதாக கூறினார் .