கொரோனா தொற்று பரவிவரும் நிலையில் பாராளுமன்றம் இன்று கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுகாதார அமைச்சின் வழிகாட்டல்களை முறையாக அனுசரித்து பா...
சுகாதார அமைச்சின் வழிகாட்டல்களை முறையாக அனுசரித்து பாராளுமன்றக் கூட்டத்தை நடத்துவதற்கு சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார்.
நிதி திருத்த சட்டமூலம் தொடர்பான இரண்டாம் வாசிப்பின் மீதான விவாதம் இன்று இடம்பெறும். அத்துடன் ஏற்றுமதி - இறக்குமதி சட்டத்திற்கான விதிமுறைகள் பற்றியும் விவாதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.