கொரோனா தொற்று அச்சம் காரணமாக உடன் அமுலுக்கு வரும் வகையில் மேலும் சில பொலிஸ் அதிகாரப் பிரிவுகளுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்...
கொரோனா தொற்று அச்சம் காரணமாக உடன் அமுலுக்கு வரும் வகையில் மேலும் சில பொலிஸ் அதிகாரப் பிரிவுகளுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி கொழும்பு மாவட்டத்தின் , மாளிகாவத்தை, வாழைத்தோட்டம், டாம் வீதி, ஆட்டுப்பட்டித்தெரு, மற்றும் கரையோர பொலிஸ் ஆகிய பொலிஸ் அதிகார பிரிவுகளுக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் அதிகாரப்பிரிவுக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் குறித்த பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.