இன்று யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நடந்த பிசிஆர் பரிசோதனையில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று யாழ் போதனா வை...
இன்று யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நடந்த பிசிஆர் பரிசோதனையில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 382 பேருக்கு பிசீஆர் பரிசோதனை செய்யப்பட்டன.
இதன்படி யாழில் 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருதனாமடம் சந்தைப் பகுதிக்கு சென்று வந்த கோப்பாயை சேர்ந்த ஒருவருக்கும் ஊர்காவற்துறையை சேர்ந்த ஒருவருக்கும் இணுவிலை சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே தொற்று கண்டுபிடிக்கப்பட்டவருடன் முன்னர் தொடர்பிலிருந்தவர் எனப்படுகிறது.
அதேசமயம் யாழ் மருத்துவபீட ஆய்வுகூடத்தில் இன்று 120 பேருக்கு பிசீஆர் பரிசோதனை செய்யப்பட்டது.
இதன்படி அங்கு பரிசோதனைக்கு உட்பட்டவர்களில் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை.
.