யாழ்.மாவட்டத்தின் நுழைவிடங்களில் துரித அண்டிஜன் பரிசோதனை விரைவில் மேற்கொள்ளப்படவுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெர...
யாழ்.மாவட்டத்தின் நுழைவிடங்களில் துரித அண்டிஜன் பரிசோதனை விரைவில் மேற்கொள்ளப்படவுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.
யாழ் மாவட்டத்தில் தற்போதய கொரோனா நிலைமைகள் தொடர்பில் இன்றையதினம் கருத்து தெரிவிக்கும் போதே கணபதிப்பிள்ளை மகேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்.....
யாழ்.மாவட்டத்தில் நேற்று 7 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி இருக்கின்றார்கள் கடந்த இரண்டு நாட்களாக தொற்று உறுதி செய்யப்படாத நிலையில் நேற்றைய பிசிஆர் பரிசோதனையில் 7 நபர்களுக்கு தொற்றுக்குள்ளாகியுள்ளார்கள்.
இதில் 6 பேர் ஏற்கனவே மருதனார்மடம் தொற்றாளர்களுடன் தொடர்பினை பேணி தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனினும் பருத்தித்துறையில் மேலும் ஒருவர் சுகயீனம் காரணமாக அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு தொற்று இனங்காணப்பட்டுள்ளது.
அவரைப் பற்றிய தகவல்கள் சுகாதாரப் பிரிவினர் சேகரிக்கப்பட்டு வருகின்றது அதற்குரிய பின்னணியும் ஆராயப்பட்டு வருகின்றது.
இந்த அடிப்படையிலே யாழ் மாவட்டத்தில் தொற்றுக்குள்ளானோர் அக்டோபர் மாதத்திற்கு பின்னர் 168 ஆக அதிகரித்துள்ளது.
அத்தோடு குணமடைந்தோரின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது அந்த நிலையை தற்பொழுது சுய தனிமைப்படுத்தலில் உள்ளோரின் எண்ணிக்கை சற்று குறைவடைந்துள்ளது.
ஆயிரத்து 41குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 807 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.
நேற்று உறுதி செய்யப் பட்டவர்களில் தெல்லிப்பளைச் சேர்ந்த மூவரும் சண்டிலிப்பாய் சேர்ந்த இருவரும் மானிப்பாய் சேர்ந்த ஒருவரும் பருத்தித்துறையை சேர்ந்த ஒருவருமாக 7 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் ஏனைய மாவட்டங்களோடு ஒப்பிடும்போது யாழ் மாவட்டத்தில் தொற்று உறுதிசெய்யப்பட்டோரின் எண்ணிக்கை சற்று மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே காணப்படுகின்றது.
இருந்த போதிலும் தொடர்ச்சியாக விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் குறித்த நிலைமையினை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும் எதிர்பார்க்கின்றோம் எனினும் அதற்கு பொதுமக்களுடைய ஒத்துழைப்பையும் நாடி நிற்கின்றோம்.
பொதுமக்கள் இதற்கு ஒத்துழைக்கும் பட்சத்தில் நமது மாவட்டத்தில் தொற்று நிலைமையினை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும் மேலும் எதிர்வரும் இரண்டு வாரங்களும் மிகவும் அபாயகரமான காலப்பகுதியாக இருக்கின்றது ஆனால் சற்று விழிப்பாக இருந்து பொதுமக்கள் ஒத்துழைப்பினை வழங்க வேண்டும்.
தற்பொழுது அரசாங்கத்தினால் திரையரங்குகள் மற்றும் ஏனைய விடயங்களிலும் இயல்பு நிலையை ஏற்படுத்தும் முகமாக சில மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளார்கள். இந்த நிலையிலே கூடுதலாக விழிப்பாக இருக்க வேண்டியதாகவுள்ளது.
எதிர்வரும் 11ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது பாடசாலைகள் ஆரம்பிப்பது குறித்து கல்வித்திணைக்களம் கல்வி அமைச்சு வடக்கு மாகாண கல்வி அமைச்சின் ஊடாக சிறப்பான ஒழுங்கினை ஏற்படுத்தியுள்ளார்கள்
பெற்றோரும் குறித்த விடயம் தொடர்பில் விழிப்பாக செயற்பட்டு பாடசாலைகள் ஆரம்பிக்கும் போதும் பெற்றோர் மற்றும் பாடசாலையுடன் சம்பந்தப்பட்ட அனைவரும் குறித்த விடயங்கள் தொடர்பில் மிகவும் விழிப்பாக செயற்படுவதன் மூலம் குறித்த கட்டுப்பாட்டினை தொடர்ச்சியாக பேணமுடியும்
இந்த நடைமுறையானது சுகாதாரப் பகுதியினருடைய ஒத்துழைப்புடன் மாணவர்களுக்கு கல்வியானது தாமதமின்றி கிடைக்க கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தும்
மேலும் தனியார் கல்வி நிலையங்களை பொறுத்தவரை இந்த வாரத்தில் அரசினுடைய அறிவுறுத்தலுக்காக காத்திருக்கின்றோம்
எனினும் முடிவு கிடைக்கும் வரை குறித்த நடைமுறை அமுலில் இருக்கும்
அத்தோடு ஏனைய செயற்பாடுகளை நாம் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி செயற்படுத்துவது மிகவும் முக்கியமானது
யாழில் சந்தைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ள நிலையில் அவற்றை மீள திறப்பதற்குரிய மாற்று ஒழுங்கு தொடர்பில் தற்போது நாங்கள் ஆராய்ந்து வருகின்றோம் அந்த மாற்று ஒழுங்கின் அடிப்படையில் சந்தைகளை மீளதிறப்பதற்கு ஏற்பாடுகளை நாங்கள் மிக விரைவில் செயல்படுத்த வுள்ளோம்
அதேவேளையில் போக்குவரத்து விடயத்திலும் மிகவும் கவனமாக செயற்படவேண்டியுள்ளதுஅபாய வலயங்களுக்கு சென்று வருபவர்கள் தங்களுடைய விவரங்களை கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும்
அதே வேளையில் யாழ் மாவட்டத்தில் துரித அன்ரிஜன் பரிசோதனை செய்வதற்கும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது அந்த முடிவு விரைவில் வடக்கு சுகாதார பிரிவால்அறிவிக்கப்பட உள்ளது
அதாவது யாழ் மாவட்டத்திற்குள் நுழையும்வாயில்களில் ஆனையிறவு மற்றும் சங்குப்பிட்டி போன்ற இடங்களில் துரித அண்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது
எதிர்வரும் நாட்களில் குறித்த அண்டியல் பரிசோதனையினை ஆரம்பிப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகிறது
வடமராட்சி பிரதேசத்தில் ஒருவர் தொற்றுக்குள்ளாகியுள்ளதனால் சுகாதாரப் பிரிவு அவருடைய தரவுகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள்
அதனுடைய பின்னணி தொடர்பாக ஆராய்ந்த பின்னரே அதனை முடக்குவதாக இல்லையா என்பது தொடர்பாக தீர்மானிக்க முடியும் எனினும் சுகாதாரப் பிரிவினராலேயேஅந்த முடிவு அறிவிக்கப்படும் எனினும் தற்போதைய நிலையில் வடமராட்சிப் பிரதேசத்தின் முடக்குவது தொடர்பில் தீர்மானமில்லை எனவும் தெரிவித்தார்.