யாழ் பல்கலை முன்றலில் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களை யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் இன்று சந்தித்தார். மாணவர் ஒன்றி...
யாழ் பல்கலை முன்றலில் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களை யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் இன்று சந்தித்தார்.
மாணவர் ஒன்றியத்தினருடன் நடத்திய சந்திப்புக்கமைய இன்று அதிகாலை 4 மணியளவில் துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராஜா உணவுத் தவிர்ப்பு இடம்பெற்ற கொட்டகை பகுதிக்கு சென்று மாணவர்களை சந்தித்தார்.
மாணவர்களின் கோரிக்கைகளை நான் ஏற்கின்றேன். அனுமதி இல்லாமல் கட்டப்பட்டதாலேயே முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இடிக்கப்பட்டது. அதனால் அனுமதி பெற்று அதனை மீள நானே முன் நின்று நடாத்துவேன் என்றும் தெரிவித்துள்ளதாக அறியமுடிகிறது.
மாணவர்களின் கோரிக்கைகளை நான் ஏற்கின்றேன். மாணவர்களை விரைவில் சந்திப்பேன் என யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் மாணவ ஒன்றிய பிரதிநிதிகளிடம் நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.