நல்லூர் கந்தப் பெருமானின் அடியவர்களின் வேண்டுகோளுக்கு அமைய நல்லூர் முருகன் தண்ணீர் பந்தல் சபையினரின் முயற்சியால் யாழ்ப்பாணம் செம்மணி வீதியில...
நல்லூர் கந்தப் பெருமானின் அடியவர்களின் வேண்டுகோளுக்கு அமைய நல்லூர் முருகன் தண்ணீர் பந்தல் சபையினரின் முயற்சியால் யாழ்ப்பாணம் செம்மணி வீதியில் புதிதாக பிரமாண்டமாக நிர்மாணிக்கப்பட்ட "நல்லூரான் செம்மணி வளைவு" எதிர்வரும் 14 ஆம் திகதி பொங்கல் தினத்தன்று நண்பகல் 12 மணியளவில் திறந்து வைக்கப்படவுள்ளது.
யாழ்ப்பாண மக்களின் கலை கலாசார பண்பாட்டு விழுமியங்களின் புனித வாழ்க்கை நெறியான கந்தபுராண கலாசாரத்தின் அடையாளங்கள் பல இவ் வளைவில் வனப்புற பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்த வளைவு அமைக்க முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன், நிதியொதுக்கீடுகளைப் பெற்றுக்கொடுத்ததோடு தனது சொந்த நிதி உதவிகளையும் வழங்கியிருந்தார்
கடந்த2019 ஆண்டு ஓகஸ்ட் மாதம் குறித்த வளைவுக்கான அடிக்கல் முன்னாள் இராஜாங்க அமைச்சரால் நாட்டி வைக்கப்பட்டு வளைவின் கட்டுமாண பணிகள் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.