சுகாதார பதில் அமைச்சராக, இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த நியமனம் வழங்க...
சுகாதார பதில் அமைச்சராக, இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த நிலையில் மீளப் பணிக்கு திரும்பவில்லை. இந்நிலையில் பதில் அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளது.
அதே நேரம் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி தொற்று நோய் சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.