யாழ்.வடமராட்சி - முள்ளி பகுதியில் விசேட அதிரடிப்படையின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான இருவரையும் 30ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு பரு...
யாழ்.வடமராட்சி - முள்ளி பகுதியில் விசேட அதிரடிப்படையின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான இருவரையும் 30ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்துறை நீதிமன்ற பதில் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் இருவரையும் இணையவழி காணொளி தொடர்பாடல் தொழிநுட்பம் ஊடாக விசாரணை செய்த பதில் நீதிவான் இருவரையும் எதிர்வரும் 30ம் திகதிவரை விளக்கமறியிலில் வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதேவேளை துப்பாக்கி சூட்டில் காயமடைந்த ஒருவர் அதி தீவிர சிகிச்சைப் பிரிவிலேயே தொடர்ந்தும் சிகிச்சைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.