யாழ்.மாவட்டத்தில் இடம்பெற்ற பல்வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய கொள்ளை கும்பல் ஒன்றை யாழ்.பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளதுடன், களவாடப...
யாழ்.மாவட்டத்தில் இடம்பெற்ற பல்வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய கொள்ளை கும்பல் ஒன்றை யாழ்.பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளதுடன், களவாடப்பட்ட சுமார் 50 லட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களையும் மீட்டுள்ளனர்.
குறித்த கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டு யாழ்.பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார்,
சந்தேக நபர்களை நாளையதினம் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளனர். நிறுவனம், கடை, தேவாலயம் மற்றும் வீடு உள்ளடங்கலாக 7 இடங்களில் கொள்ளையிடப்பட்ட உபகரணங்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக
பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோவின் வழிகாட்டலில், யாழ்.பொலிஸ் நிலைய குற்ற விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி சி.ஐ.நெவில்பியந்த தலைமையிலான குழுவினரே