மாகாண சபை தேர்தல் தொடர்பில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் தீர்மானமின்றி நிறைவ...
மாகாண சபை தேர்தல் தொடர்பில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் தீர்மானமின்றி நிறைவடைந்ததாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
மினுவங்கொடை நகரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு அமைச்சர் இதனை தெரிவித்தார்.
தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவால் சுப நேரம் மற்றும் அரசாங்கத்தின் அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பில் மக்களை விழிப்பூட்டும் வகையில் துண்டுப்பிரசுரம் விநியோகிக்கும் நிகழ்வு இன்று நெலும் மாவத்தையில் அமைந்துள்ள பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்தில் ஆரம்பமானது.
அதே நேரத்தில் மினுவங்கொடையிலும் துண்டுப்பிரசுரம் விநியோக நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர்,
இது முதலாவது கலந்துரையாடல், மாதாந்தம் ஒன்று கூடி கலந்துரையாடினால் சிறந்தது என அவர்கள் கூறினார்கள். முதலாவது கலந்துரையாடலில் எவ்வித தீர்மானத்திற்கும் வர முடியவில்லை. நாம் அமைந்த கூட்டணியை பாதுகாத்து கொள்வதே எமது முயற்சி. மாகாண சபைகள் நமது அரசியலமைப்பின் ஒருங்கிணைந்த பகுதியாகும். மாகாண சபைகளை முற்றிலுமாக மறந்து தேர்தலை நடத்த முடியாது, ”என்று அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் கூறினார்.