ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டு ஈராண்டுகள் இன்றுடன் பூர்த்தியாகின்றன. இந்த தாக்குதலில் உயிரிழந்தோரை நினைவுகூரும் நிகழ்வு தற்போது ஆரம்பமாகியுள்...
ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டு ஈராண்டுகள் இன்றுடன் பூர்த்தியாகின்றன.
இந்த தாக்குதலில் உயிரிழந்தோரை நினைவுகூரும் நிகழ்வு தற்போது ஆரம்பமாகியுள்ளது.
கொழும்பு கொச்சிகடை புனித அந்தோனியார் தேவாலய வளாகத்தில் இந்த நிகழ்வு நடைபெற்று வருகின்றது.
நினைவேந்தல் நிகழ்வில் வெளிநாட்டு தூதுவர்கள், சமய தலைவர்கள், பாதிக்கப்பட்ட தரப்பினர் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
ஈஸ்டர் தாக்குதலில் உயிர்நீத்த உறவுகளுக்கு 2 நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.