மருத்துவமனைகளில் உள்ள குறைபாடுகள் மற்றும் வசதிகளை நிவர்த்தி செய்ய உதவுமாறு இந்த நாட்டிலுள்ள பணக்காரர்களிடம் இராஜாங்க அமைச்சர் டாக்டர் சுதர...
மருத்துவமனைகளில் உள்ள குறைபாடுகள் மற்றும் வசதிகளை நிவர்த்தி செய்ய உதவுமாறு இந்த நாட்டிலுள்ள பணக்காரர்களிடம் இராஜாங்க அமைச்சர் டாக்டர் சுதர்ஷனி பெர்னாண்டோபுல்லே கூறினார்.
இலங்கையில் கொரோனா இறப்புகள் அதிகரிக்கும் என்று கோவிட் தடுப்பு மத்திய நிலையம் கணித்துள்ளதாகவும், அதை சமாளிக்க அரசு மருத்துவமனை வசதிகளை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வரும் நிலையில், அவற்றில் தேவையான உபகரணங்கள் பொருத்தப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
இந்த நாட்டிலுள்ள பணக்காரர்கள் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளைத் தொடர்புகொண்டு, முடிந்த ஒரு சிறிய உதவிகளை செய்யுமாறு அவர் மேலும் கேட்டுக்கொண்டார்.