இணைய வழி ஊடாக மதுபானங்களை விற்பனை செய்ய நிதி அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக கலால்வரி திணைக்கள ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். மதுபானங்களை...
இணைய வழி ஊடாக மதுபானங்களை விற்பனை செய்ய நிதி அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக கலால்வரி திணைக்கள ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
மதுபானங்களை இணைய வழியாக விற்பனை செய்ய பல்வேறு பல்பொருள் அங்காடிகள் கலால்வரி திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்திருந்த நிலையிலேயே, இந்த அனுமதி இன்று கிடைத்துள்ளது.
பல்பொருள் அங்காடிகளினால் விடுக்கப்பட்ட கோரிக்கையை, கலால்வரி திணைக்களம் நிதி அமைச்சிடம் முன்வைத்திருந்ததுடன், அதற்கான அனுமதி இன்று வழங்கப்பட்டுள்ளது.