மின் விநியோக மார்க்கங்களின் புனரமைப்பு மற்றும் கட்டுமான பணிகளுக்காக யாழ்.மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று ஞாயிற்று கிழமை மின்வெட்டு அமுல்ப்ப...
மின் விநியோக மார்க்கங்களின் புனரமைப்பு மற்றும் கட்டுமான பணிகளுக்காக யாழ்.மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று ஞாயிற்று கிழமை மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.
குறித்த தகவலை மின்சாரசபையின் வடபிராந்திய பிரதி பொதுமுகாமையாளர் அறிவித்திருக்கின்றார். இதன்படி இன்று காலை 8 மணி தொடக்கம் மாலை 5 மணிவரை மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
ஏழாலை, குப்பிளான், மயிலங்காடு, கட்டுவன் , கட்டுவன்புலம், சுன்னாகம் சூராவத்தை, புகையிரத நிலைய வீதி, மணியம் கடையடி, தோப்பு, சுன்னாகம் டெலிகொம், அரசடி பழம் வீதிச் சந்தி,
கைலாசப் பிள்ளையார் கோவில், நல்லூர் கோவில், நாவலர் வீதி இராசாவின் தோட்டம், பருத்தித்துறை வீதி, றக்கா வீதி- சுண்டுக்குளி , றக்கா வீதி- கோயில் வீதிச் சந்தி , இராமநாதன் வீதி புகையிரதக் குறுக்குச் சந்தி ,
பிரிட்டிஷ் கவுன்சில்- றக்கா வீதி , விஞ்ஞான பீடம், தியாகி அறக்கொடை நிலையம், றியோ கிறீம் ஹவுஸ் ஆகிய பகுதிகளிலும்,யாழ்.தென்மராட்சிப் பிரதேசத்தில் சாவகச்சேரி, அரசடி, மருதடி, ஆசிரியர் வீதிச் சந்தி,
சாவகச்சேரி நகரம், சாவகச்சேரிப் பிரதேச செயலகம், டச்சு வீதி, கண்டுவில் டச்சுவீதி, கச்சாய் வீதி கல்வயல் துர்க்கை அம்மன் கோவில் பிரதேசம், சங்கத்தானை மீனாட்சி அம்மன் கோவில், நுணாவில் பெருங்குளம் சந்தி,
தபால் அலுவலகம் சந்தி, சாவகச்சேரிப் புகையிரத நிலைய வீதி, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை, சாவகச்சேரி நீதிமன்ற வளாகம் ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.