யாழ்ப்பாணம் − நெடுந்தீவு மற்றும் யாழ்ப்பாணம் பழைய கச்சேரி காணி ஆகிய பகுதிகள் வெளிநாடொன்றுக்கு விற்பனை செய்யவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டம...
யாழ்ப்பாணம் − நெடுந்தீவு மற்றும் யாழ்ப்பாணம் பழைய கச்சேரி காணி ஆகிய பகுதிகள் வெளிநாடொன்றுக்கு விற்பனை செய்யவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் S.ஶ்ரீதரன் முன்வைத்த குற்றச்சாட்டு போலியானது என பிரதமரின் இணைப்புச் செயலாளர் கீத்நாத் காசிலிங்கம் தெரிவித்துள்ளார்.
சக்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியொன்றில் கலந்துக்கொண்ட S.ஶ்ரீதரன், இந்த குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.
இந்த குற்றச்சாட்டுக்கு தனது டுவிட்டர் பக்கத்தின் ஊடாக பிரதமரின் இணைப்புச் செயலாளர் கீத்நாத் காசிலிங்கம் பதிலளித்த போதே, இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
After inquiring into the allegations made by @TNAmediaoffice MP. Hon. Sritharan, I was informed by authorities that these allegations are absolutely FALSE and there are no moves to sell any land on the Delft Island or the old Jaffna Kachcheri building to any foreign company. #lka https://t.co/ny8R2pEC9U
— G. Cassilingham (@CassilingamG) July 6, 2021