சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில், அவரது உடல் நிலை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பல்வேறு பதிவுக...
சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில், அவரது உடல் நிலை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பல்வேறு பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், அஜித் ரோஹணவின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதென சமூக வலைத்தளத்தில் புகைப்படமொன்று பகிரப்பட்டு வந்த நிலையில், அது உண்மைக்கு புறம்பான செய்தி என பொலிஸ் தலைமையகம் அறிவித்திருந்தது.
இவ்வாறான சர்ச்சைக்கு மத்தியில், தான் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் புகைப்படமொன்றை அஜித் ரோஹண வெளியிட்டுள்ளார்.
அஜித் ரோஹண சிறந்த தேகாரோக்கியதுடன், உள்ளதாக வைத்தியசாலை தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.