யாழ் மாவட்டத்தில் நுகர்வோர் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக விலைக் கட்டுப்பாட்டை அவதானிப்பதற்காக 65 பட்டதாரி பயிலுனர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர...
யாழ் மாவட்டத்தில் நுகர்வோர் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக விலைக் கட்டுப்பாட்டை அவதானிப்பதற்காக 65 பட்டதாரி பயிலுனர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
யாழ் மாவட்டத்திலுள்ள 15 பிரதேச செயலகங்களிலும் இருந்து அதற்கான உத்தியோகத்தர்கள் தெரிவுசெய்யப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைகள் மற்றும் வர்த்தக ர்களுக்கு அறிவுறுத்தல்களை மேற்கொள்ளவுள்ளனர்.
நுகர்வோருக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் அரசாங்கத்தால் நிர்ணயக்கப்பட்ட விலைக்களுக்கு அதிகமாகப் பொருட்களை விற்பனை செய்தல்,பொருட்களைப் பதுக்கி வைத்திருத்தல் போன்ற நடவடிக்கைகளை குறித்த உத்தியோகத்தர்கள் கண்காணிக்க உள்ளனர்.
இக் கண்காணிப்பு நடவடிக்கை இம்மாதம் செப்டம்பர் 30ஆம் திகதிவரை நாடு பூராகச் செயற்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.