யாழ் புத்தூர் மீசாலை சந்தியில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை கனகர உழவு இயந்திரம் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பட...
யாழ் புத்தூர் மீசாலை சந்தியில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை கனகர உழவு இயந்திரம் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது குறித்த சந்திப்பகுதியில் கனகர உழவு இயந்திரம் வீதியை கடக்க முற்பட்டபோது மோட்டார் சைக்கிளிலுடன் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டது.
மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தவர் கை மற்றும் கால்களில் காயங்கள் ஏற்பட்ட நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.