யாழ்.வரணி - குடமியன் பகுதியில் இரு வெடி குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார், மற்றும் படையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கு...
யாழ்.வரணி - குடமியன் பகுதியில் இரு வெடி குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார், மற்றும் படையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த பகுதியில் தனியார் தோட்டக் காணி ஒன்றில் உள்ள துரவுக்கு அருகாக இரண்டு மர்மப் பொருட்கள் இருப்பதாக நேற்று மாலை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அங்கு சென்ற பொலிஸார் அதனைப் பார்வையிட்டதுடன் குண்டு செயலிழக்கவைக்கும் படையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இந்நிலையில் தற்போது அந்தப் பகுதியில் பெருமளவு படையினரும் பொலிஸாரும் பிரசன்னமாகி அதனை மீட்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த வெடிபொருளின் மேலாக கப்டன் (ஐயா) 99 தகர்ப்பு வெடி மருந்து எனப் பெயரிடப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் அதில் சில எழுத்துக்கள் அழிவடைந்து காணப்படுகின்றமையால்
முழுமையாக வாசித்து அறிய முடியவில்லை. அவை தமிழீழ விடுதலைப்புலிகளின் பாவனையில் இருந்தவையாக இருக்கலாம் என்று சந்தேகிகக்கப்படுகிறது.