யாழ் நகரில் வீடு உடைத்து திருட்டில் ஈடுபட்ட நபர்கள் ஐவர் யாழ் குற்றத்தடுப்புபிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். யாழ் நகரப்பகுதியில் கடந்த...
யாழ் நகரில் வீடு உடைத்து திருட்டில் ஈடுபட்ட நபர்கள் ஐவர் யாழ் குற்றத்தடுப்புபிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
யாழ் நகரப்பகுதியில் கடந்த 15ம் திகதி வீட்டில் உரிமையாளர்கள் அற்ற நேரம் வீட்டின் கதவை உடைத்து 10 பவுண் தங்க நகைகள் திருடப்பட்டன இது தொடர்பில் யாழ் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புபிரிவு பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டன. இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புபட்ட ஐவரை நேற்றைய தினம் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் குருநகர், திருநகர், மற்றும் யாழ் நகரப்பகுதிகளை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகளும் பொலிஸாரால் மீட்கப்பட்டன. குறித்த கைது நடவடிக்கைகள் யாழ் குற்றத்தடுப்புபிரிவு பொறுப்பதிகாரி தலைமையில் உத்தியோகத்தர்களான விஜயகாந்த் வாகிசன் கபில்தாஸ் போன்ற குழுவினரால் மேற்கொள்ளப்பட்டிருநதன