பலாங்கொடை – பஹன்துடாவ பகுதியில் பாலியல் உணர்வுகளை தூண்டும் வகையிலான வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்த குற்றச்சாட்டில் கைதான இருவ...
பலாங்கொடை – பஹன்துடாவ பகுதியில் பாலியல் உணர்வுகளை தூண்டும் வகையிலான வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்த குற்றச்சாட்டில் கைதான இருவர், பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு நீதவான் நீதிமன்றில் எதிர்வரும் 16ம் திகதி சந்தேகநபர்களை முன்னிலையாகுமாறு, விடுவிக்கப்பட்ட இளைஞர் மற்றும் யுவதிக்கு பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் கைதான இளைஞனுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், யுவதி கொவிட் தொற்றாளருடன் பழகியுள்ளமையினால், இருவரும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பலாங்கொடை – பஹன்துடாவ நீர்வீழ்ச்சியில் பாலியல் உணர்வுகளை தூண்டும் வகையிலான காணொளியொன்றை பதிவு செய்து, அதனை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்த குற்றச்சாட்டின் கீழ் இளைஞர் ஒருவரும், யுவதியொருவரும் நேற்றைய தினம் (02) குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
மஹரகம – பமுனுவ பகுதியைச் சேர்ந்த 34 வயதான இளைஞனும், எல்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 24 வயதான யுவதியொருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை குற்றத் தடுப்பு திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.