யாழ் துரையப்பா விளையாட்டரங்கில் சர்வதேச உதை பந்தாட்ட போட்டியை நடாத்தப்படவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். வியா...
யாழ் துரையப்பா விளையாட்டரங்கில் சர்வதேச உதை பந்தாட்ட போட்டியை நடாத்தப்படவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் அபிவிருத்திகள் தொடர்பாக கள ஆய்வினை மேற்கொண்ட போது விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனிடம் இவ்வாறு தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் ஆசிய நாடுகளின் சர்வதேச உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் சில போட்டிகளை எதிர்வரும் நவம்பர் மாதம் நடாத்தத் திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.