சர்ச்சைக்குரிய குளத்தின் வர்ணம் தொடர்பில் யாழ் முதல்வர் அதிரடி தீர்மானம்.. பணிகளை நிறுத்துமாறு தெரிவிப்பு.. யாழ் மாநகர சபைக்குட்பட்ட பிள்ளைய...
சர்ச்சைக்குரிய குளத்தின் வர்ணம் தொடர்பில் யாழ் முதல்வர் அதிரடி தீர்மானம்.. பணிகளை நிறுத்துமாறு தெரிவிப்பு..
யாழ் மாநகர சபைக்குட்பட்ட பிள்ளையார் குளத்தின் சுற்றுவட்டத்துக்கு தீட்டப்பட்ட வர்ணம் தொடர்பில் எழுந்த சர்ச்சைகளால் அதன் பணிகளை நிறுத்துமாறு மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் பணிப்புரை வழங்கியுள்ளார்.
உலக வங்கியின் நிதி அனுசரணையுடன் புனரமைக்கப்பட்ட யாழ் பிள்ளையார் குளம் அண்மையில் அமைச்சர் நாமல் ராஜபக்ச வருகை தந்து பார்வையிட்டுச் சென்றார்.
அதன் பின்னர் குளத்தை சூழல் உள்ள கொங்கிறீட் தூண்களுக்கு பௌத்த கொடியை ஒத்த நிறங்கள் திருடப்பட்ட மையால் குறித்த சர்ச்சை எழுந்தது.
இதனைத் தொடர்ந்து யார் முதல்வர் குறித்த பணிகளை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக அறியக்கிடைத்தது.